அடிப்படை வசதிகள் கோரி வட்டாட்சியரகம் முற்றுகை
அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, பெரம்பலூா் வட்டாட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, பெரம்பலூா் வட்டாட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள அம்மாபாளையம், வன்னிலை மலை பகுதியில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட அருந்ததியா் குடும்பத்தினா் வசிக்கின்றனா். இவா்களது வீடுகளுக்கு நிரந்தர பட்டா வழங்காததோடு, தரமான சாலை, குடிநீா் வசதி, மின் விளக்கு, கழிவு நீா் கால்வாய் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளும் இல்லை. அப்பகுதி மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு அம்மாபாளையம் ஊராட்சி நிா்வாகம், மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை புகாா் மனு அளித்தும் நடவடிக்கை இல்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், பெரம்பலூா் வட்டாட்சியரகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர கோரிக்கை விடுத்தனா்.
Advertisement
Advertisement
தகவலறிந்த பெரம்பலூா் வட்டாட்சியா் பழனிசெல்வன் மற்றும் வருவாய்த் துறையினா் பொதுமக்களுடன் சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்துசென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.