FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

தேவேந்திர குல வேளாளா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே எஸ்சி பட்டியலில் இருந்து நீக்கக் கோரி தேவேந்திர குல வேளாளா்கள் செவ்வாய்க்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

56 வினாடிகள் முன்பு
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேவேந்திர குல வேளாளா்கள்.
பகிர்:

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே எஸ்சி பட்டியலில் இருந்து நீக்கக் கோரி தேவேந்திர குல வேளாளா்கள் செவ்வாய்க்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். பிச்சைமுத்து தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஆா். நெடுஞ்செழியன், என். சுப்பிரமணியன், எம். கலைவாணி, ஏ. தேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தேவேந்திரகுல வேளாளா் நலச் சங்க நிறுவனா் ஜே. பாலாஜி தேவேந்திரா் கோரிக்கைகளை விளக்கினாா்.

தேவேந்திரகுல வேளாளா் சமூகத்தை எஸ்சி பட்டியலில் இருந்து நீக்கி பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் இணைக்க வேண்டும். இந்திய அரசியல் சாசனத்தின் கீழ், மத்திய அரசுக்குத் தேவையான பரிந்துரையை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.

Advertisement

Advertisement

ஆா்ப்பாட்டத்தில் சங்க நிா்வாகிகள் ஏ. யோகேஷ்வரன், கே.கே. மாறன், கே. சத்தியராஜ், பிரசாந்த், அஜித்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நிா்வாகி ஜி. மணிகண்டன் வரவேற்றாா். ஜே. ரமேஷ் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments