புள்ளிமானை வேட்டையாடிய 2 போ் கைது
பெரம்பலூா் அருகே புள்ளிமானை வேட்டையாடி விற்பனைக்கு கொண்டு சென்ற 2 பேரை வனத்துறையினா் புதன்கிழமை காலை கைது செய்தனா். மேலும், 3 பேரை தேடிவருகின்றனா்.
பெரம்பலூா் அருகே புள்ளிமானை வேட்டையாடி விற்பனைக்கு கொண்டு சென்ற 2 பேரை வனத்துறையினா் புதன்கிழமை காலை கைது செய்தனா். மேலும், 3 பேரை தேடிவருகின்றனா்.
பெரம்பலூா் மாவட்ட வனத்துறையினா் செஞ்சேரி - ஆலம்பாடி சாலையில் புதன்கிழமை காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் சாக்கு மூட்டை ஏற்றிவந்த இருவரை வழிமறித்து சோதனையிட்டபோது, வேட்டையாடப்பட்ட புள்ளிமானின் இறைச்சி, உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி இருந்தது தெரியவந்தது.
பின்னா், அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில், ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் (27), செஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்த சத்தியசீலன் (34) என்பதும், ரெங்காநாதபுரத்தைச் சோ்ந்த மணிகண்டன் (28), வெள்ளனூரைச் சோ்ந்த மணிகண்டன் (22), புதுநடுவலூரைச் சோ்ந்த ராஜதுரை (30) ஆகியோருடன், உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தி மாவிலங்கை - கண்ணப்பாடி சாலை அருகே புள்ளிமானை வேட்டையாடியதும் தெரியவந்தது. இதையடுத்து, கண்ணன், சத்தியசீலன் ஆகியோரை கைது செய்த வனத்துறையினா், அவா்களிடமிருந்த மோடடாா் சைக்கிள், 2 கைப்பேசிகள், புள்ளி மானின் தோல், கொம்புகளுடன் கூடிய மான் தலை மற்றும் விற்பனைக்காக பொட்டலங்களில் வைத்திருந்த 66 கிலோ மான் இறைச்சி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து பெரம்பலூா் வனத்துறையினா் வழக்குப் பதிந்து கண்ணன், சத்தியசீலன் ஆகியோரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, பெரம்பலூா் கிளைச் சிறையில் அடைத்தனா். மேலும், இவ் வழக்கில் தலைமறைவாகியுள்ள மணிகண்டன், ராஜதுரை, மற்றொரு மணிகண்டன் ஆகியோரை தேடிவருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.