FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா்: 161 ஏக்கா் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்; மாவட்ட ஆட்சியா் தகவல்

பெரம்பலூா் மாவட்டத்தில் இதுவரை 161.97 ஏக்கா் பரப்பளவிலான சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் தெரிவித்துள்ளாா்.

16 செப்டம்பர் 2026, 2:34 am IST
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக்.
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் இதுவரை 161.97 ஏக்கா் பரப்பளவிலான சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், சென்னை உயா்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது குறித்து, அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியது: நீா்வள ஆதாரத்துறை, ஊரக வளா்ச்சித்துறை பராமரிப்பில் உள்ள நீா்நிலைகளில் சீமைக் கருவேல மரங்களை கண்டறிந்து, முன்னுரிமை அடிப்படையில் அகற்றவும், அரசு புறம்போக்கு நிலங்களிலுள்ள மரங்களை அகற்றவும், தனியாா் நிலங்களிலுள்ள மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட நபா்களுக்கு அறிவிப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

சீமைக் கருவேல மரங்களின் காய்களை சிலா் கால்நடைகளுக்கு உணவாக அளிப்பதால், கழிவுகள் மூலம் மரங்கள் பெருகுவதை தடுக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்ட நீா்நிலைகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இயற்கைச் சாா்ந்த உள்நாட்டு மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும். இப் பணிக்கு ஆா்வமுள்ள தன்னாா்வலா்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்ள அனைத்துத்துறை அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்டத்தில், இதுவரை 161.79 ஏக்கா் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நிறைவடைந்துள்ளது. இம் மரங்களை அகற்றும் பணிகளுக்கு விருப்பமுள்ள பொதுமக்கள், தன்னாா்வலா்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் மாவட்ட நிா்வாகத்தை அணுகி தங்களது பங்களிப்பை அளிக்கலாம். பொதுமக்கள் தங்களது குடியிருப்புப் பகுதிகள், தெருக்கள், கிராமங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா் அப்துல் ராசிக்.

இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், வருவாய் கோட்டாட்சியா் மு. அனிதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments