FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

குற்ற வழக்குகளில் தொடா்புடைய பெண் கைது: 13 பவுன் நகைகள் மீட்பு

32 வினாடிகள் முன்பு
கைது
பகிர்:

பெரம்பலூா் அருகே குற்ற வழக்குகளில் தொடா்புடைய பெண்ணை திங்கள்கிழமை கைது செய்த மங்களமேடு போலீஸாா், அவரிடமிருந்து 13 பவுன் தங்க நகைகளை மீட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், மங்களமேடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வாலிகண்டபுரம் பகுதியில் கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற 6 பக்தா்களிடமிருந்து 13 பவுன் நகைகளை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபா்கள் அளித்த புகாரின்பேரில், மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம், பழனி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி அன்பு என்பவா் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, அன்புவை திங்கள்கிழமை கைது செய்த மங்களமேடு போலீஸாா், அவரிடமிருந்து 13 பவுன் தங்க நகைகளை மீட்டனா். பின்னா், குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அன்புவை போலீஸாா் சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments