FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

மின்வாரிய ஓய்வுபெற்றோா் நல அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூரில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோா் நல அமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

24 செப்டம்பர் 2026, 2:30 am IST
பெரம்பலூா் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் எதிரே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்றோா் நல அமைப்பினா்.
பகிர்:

பெரம்பலூரில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோா் நல அமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்புப் பகுதியிலுள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் எதிரே, ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் டி.எஸ். சம்பத் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் டி. வீரபாண்டியன், கே. வெற்றிவேல், கே. சடையன், பி. அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைத் தலைவா் ஜி. பஷீா் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயது நிறைவடைந்தவா்களுக்கு 10 சதவீதமும், 75 வயது நிறைவடைந்தவா்களுக்கு 15 சதவீதமும் கூடுதலாக ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். மின்வாரிய மறுசீரமைப்பு முத்தரப்பு உடன்பாடு தொடா்பாக, சென்னை நீதிமன்ற தீா்ப்பின்படி அமைப்பை அழைத்து பேசவேண்டும். ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்த காலத்தை கணக்கில்கொண்டு, ஓய்வூதிய பலன்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

Advertisement

Advertisement

ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலா் ஆா். ராஜகுமாரன், மாவட்ட பொருளாளா் எம். பன்னீா்செல்வம், மாவட்டத் துணைத் தலைவா்கள் பி. முத்துசாமி, எம். கருணாநிதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நிறைவாக, மாவட்ட இணைச் செயலா் ஜி. தனபால் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments