நகராட்சியின் அவசரக் கூட்டம்:எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு :104 தீர்மானங்கள் நிறைவேற்றம்
புதுகை நகராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 5 நிமிட அவசரக் கூட்டத்தில் விவாதமின்றி 104 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுகை நகராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 5 நிமிட அவசரக் கூட்டத்தில் விவாதமின்றி 104 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
நகர்மன்றத்தின் அவசரக்கூட்டம் வெள்ளிக்கிழமை மதியம் நடைபெறுவதாக உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பங்கேற்க வந்த உறுப்பினர்களுக்கு 104 தீர்மானங்கள் அடங்கிய புத்தகம் கூட்ட அரங்கினுள் நுழையும் போது கொடுத்தனராம். சில உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லையாம்.
அதில் 2 வது தீர்மானத்தில் 2016-17 ஆம் ஆண்டுக்கான திருத்திய மற்றும் உத்தேச வரவு - செலவு விவரங்களை அறிந்த எதிர்கட்சி உறுப்பினர்கள் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கூட்ட அரங்கிலிருந்து வெளி நடப்பு செய்தனர்.
Advertisement
Advertisement
காங்கிரஸ் உறுப்பினர் இப்ராகிம்பாபு கூறியது: நகராட்சியில் நடந்தது முற்றிலும் ஜனநாயக விரோதமான செயல். இதை வன்மையாகக் கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம். வரவு செலவு அறிக்கையை அவசர கூட்டத்தில் தீர்மானமாக வைக்கக் கூடாது என்பது நாகராட்சி மரபு. தற்போது புதுகை நகராட்சி மரபுகளை மீறி செயல்படுகின்றனர்.
இதுகுறித்து திமுக உறுப்பினர் சந்தோஷ் கூறியது: 104 தீர்மானங்கள் அடங்கிய புத்தகம் கூட்ட அரங்கினுள் நுழையும் போது தந்தனர். நகராட்சியில் எவ்வித விவாதமும் நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது என்றார்.
5 நிமிடம் நடந்த நகர்மன்றக் கூட்டத்தில் தலைவர் ரா. ராஜசேகர் பங்கேற்கவில்லை. நகராட்சி துணைத் தலைவராக இருக்கும் எஸ். அப்துல்ரகுமான் பங்கேற்று கூட்டத்தை நடத்தினார்.
தகவலறிந்து பத்திரிகையாளர்கள் கூட்ட அரங்கினுள் நுழையும் போதே கூட்டம் நிறைவுற்று அனைவரும் கலைந்து சென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.