FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆலங்குடி அருகே குடிநீர் கோரி சாலை மறியல்

புதுக்கோட் டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள பாப்பான்விடுதியில் குடிநீர் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

புதுக்கோட் டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள பாப்பான்விடுதியில் குடிநீர் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி அருகேயுள்ள பாப்பான்விடுதியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். அவர்களுக்கு அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில்,மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மின்மோட்டார் பழுதடைந்துள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாகியும் ஆழ்குழாய் கிணற்றை பயன்பாட்டுக்குக் கொண்டுவரவில்லையாம். இதுகுறித்து பலமுறை ஊராட்சி  நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை ஏதும் இல்லையாம். 
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு சென்ற ஆலங்குடி போலீஸார், வருவாய்த் துறை அலுவலர்கள்  உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.
இதனால், ஆலங்குடி-கறம்பக்குடி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
பொன்னமராவதி: பொன்னமராவதி ஒன்றியம் கருப்புக்குடிப்பட்டி கிராமத்தில் குடிநீர் கோரி செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் ஈடுபட்டனர். 
கருப்புக்குடிப்பட்டியில் சுமார் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இம்மக்களுக்கு ஊரின் மையப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மூலம் குடிநீர் விநியோகம் செய்ப்பட்டு வருகிறது. இந்தத் தொட்டி அண்மைக்காலமாக மிகவும் சேதமடைந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டு முறையாகக் குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதைக்கண்டித்து, செவ்வாய்க்கிழமை பெண்கள் காலிக்குடங்களுடன்  சாலை மறியலில் ஈடுபட்டனர். ஊர்முக்கியஸ்தர்கள் முறையாக அதிகாரிகளிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம் எனக் கூறியதால் மறியல் போராட்டம் உடனடியாக கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments