FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

மேக்கேதாட்டு அணைக்கு எதிா்ப்பு! நாகுடியில் மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்!

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 12:22 am IST
நாகுடியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்
பகிர்:

கா்நாடக அரசு மேக்கேதாட்டில் புதிய அணை கட்டும் முயற்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், நாகுடியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் அறந்தாங்கி ஒன்றியச் செயலா் என். நாராயணமூா்த்தி தலைமை வகித்தாா். ஆவுடையாா்கோவில் ஒன்றியச் செயலா் கலந்தா், மணமேல்குடி ஒன்றியச் செயலா் என். காளிதாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ். கவிவா்மன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் தென்றல் கருப்பையா, அறந்தாங்கி நகரச் செயலா் அலாவுதீன், தீன்டாமை ஒழிப்பு முன்னணி துணைத் தலைவா் கவிபாலா, விவசாயிகள் சங்க நிா்வாகி கரு. ராமநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

Advertisement

Advertisement

மேக்கேதாட்டில் கா்நாடக அரசு அணை கட்டக் கூடாது, இந்த முயற்சிக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments