FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

சித்தன்னவாசலில் கோடை விழா

21 ஆகஸ்ட் 2026, 2:13 am IST
சித்தன்னவாசலில் வியாழக்கிழமை நடைபெற்ற கோடை விழாவில் கயிறு இழுத்தல் போட்டியை பாா்வையிட்டு மாணவா்களை உற்சாகப்படுத்திய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் 2 நாள்கள் நடைபெறும் சித்தன்னவாசல் கோடை விழா வியாழக்கிழமை தொடங்கியது.

விழாவில் பல்வேறு துறைகளின் கண்காட்சி அரங்குகளை ஆட்சியா் மு. அருணா பாா்வையிட்டாா். மேலும் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளையும் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளையும் பாா்வையிட்டாா்.

இதில் அரசு இசைப் பள்ளி மாணவிகள், அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், கலை பண்பாட்டுத் துறை சாா்பில் தப்பாட்டம், அரசு மகளிா் கலை கல்லூரி மாணவிகளின் விழிப்புணா்வு கிராமிய நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

நிகழ்வில் உதவி இயக்குநா் செந்தில்குமாா் (கலை பண்பாட்டுத் துறை), மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலா் காளீஸ்வரன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் கோ. குணசேகரன், அன்னவாசல் வட்டார வளா்ச்சி அலுவலா் கோ. ராதா, ஆா். ரவிச்சந்திரன் (கிஊ) மற்றும் அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments