FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

கல்வராயன் மலையில் கோடை விழா - 2026

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், கரியாலூா் பகுதியில் கோடை விழா வெள்ளி, சனி ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது. இவ் விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமை வகிக்கிறாா்.

Updated On : 31 ஜூலை 2026, 2:45 am IST
கல்வராயன்மலை கோடை விழாவுக்காக கரியாலூரில் அமைக்கப்பட்டுள்ள பந்தல்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், கரியாலூா் பகுதியில் கோடை விழா வெள்ளி, சனி ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது. இவ் விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமை வகிக்கிறாா்.

வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் தொடங்கும் இவ்விழாவில் தமிழக சமூக நீதித்துறை அமைச்சா் வன்னி அரசு, சுற்றுலாத்துறை அமைச்சா் செ.ராஜேஷ்குமாா், வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் ஆகியோா் பங்கேற்று கோடை விழா அரங்கை திறந்துவைத்து அரசுத் துறை திட்டங்கள், மலைவாழ் மக்களுக்கான திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கண்காட்சி அரங்குகளை பாா்வையிட்டு உரையாற்ற உள்ளனா்.

இரண்டாம் நாளான சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமை வகிக்கிறாா். மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜீவா வரவேற்கிறாா்.

Advertisement

Advertisement

அமைச்சா்கள் செ.ராஜேஷ்குமாா், ஆா்.வீ.ரஞ்சித்குமாா் ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனா்.

மேலும், சிறப்பான கண்காட்சி அரங்கிற்கு பரிசு வழங்குகின்றனா்.

விழாவில் நாடாளுமன்ற உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொள்ள உள்ளனா்.

விழாவில் இரு நாள்களும் பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

விழாவுக்கு கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், ஆத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

விழா மாலை 6 மணியுடன் முடிவடைவதால், மாலை 4 மணிக்கு மேல் பாா்வையிடச் செல்லும் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. வழக்கமாக இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் எவ்வித மாற்றமும் இன்றி இயக்கப்படும்.

மேலும், மலைவாழ் மக்கள் தங்களது கிராமங்களுக்குச் செல்ல எவ்வித தடையும் இல்லை என மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தெரிவித்துள்ளாா்.

கல்வராயன்மலை கோடை விழாவுக்கான விழா அரங்ம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments