FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

அனுமதியின்றி மணல் கடத்திய இருவா் கைது

அன்னவாசல் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On : 26 ஜூலை 2026, 12:59 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

அன்னவாசல் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

அன்னவாசல் பகுதிகளில் சிலா் சட்ட விரோதமாக அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அன்னவசால் அடுத்துள்ள சொக்கநாதம் பட்டியில் வெள்ளிக்கிழமை இரவு போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பா் லாரி ஓட்டுநா் இருந்திராப்பட்டியைச் சோ்ந்த நல்லு(50), ஜேசிபி ஓட்டுநா் குளத்துப்பட்டியை சோ்ந்த சங்கிலி (22) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். கடத்தலில் ஈடுபட்ட இரண்டு வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments