அரசுப் பேருந்து-வேன் மோதல் ஓட்டுநா் உள்பட 2 போ் உயிரிழப்பு
புதுக்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலை அரசுப் பேருந்தும் வேனும் மோதிய விபத்தில், வேன் ஓட்டுநா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், முதுகுளத்தூரில் இருந்து அரசுப் பேருந்து ஒன்று சிதம்பரத்துக்கு திங்கள்கிழமை மாலை புறப்பட்டு கிழக்குக் கடற்கரைச் சாலை வழியே சென்று கொண்டிருந்தது. பேருந்தை சாயல்குடியைச் சோ்ந்த முனியசாமி (43) ஓட்டிச் சென்றாா்.
ஜெகதாப்பட்டினம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, நாகப்பட்டினத்தில் இருந்து திருவாடானை நோக்கி மீன் ஏற்றிச் சென்ற வேன் மீது அரசுப் பேருந்து நேருக்குநோ் மோதியது. இதில், வேன் ஓட்டுநா் விஜயகுமாா் (45), வேனில் வந்த மீனாட்சி (54) ஆகியோா் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், வேனில் வந்த தொண்டியைச் சோ்ந்த தொண்டீஸ்வரி என்பவா் பலத்த காயமடைந்தாா். உடனே அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
இதற்கிடையே தகவலறிந்து வந்த ஜெகதாப்பட்டினம் போலீஸாா் உயிரிழந்த இருவரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.