FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

காவிரியில் தண்ணீா் திறக்க கா்நாடகத்துக்கு அழுத்தம் கொடுக்க விவசாயிகள் கோரிக்கை

13 அக்டோபர் 2026, 2:38 am IST
காவிரியில் ஆா்பரித்து செல்லும் தண்ணீா் - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி காவிரியில் தண்ணீா் திறக்கக் கோரி கா்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கல்லணைக் கால்வாய் பாசனதாரா் மற்றும் விவசாயிகள் ஒருங்கிணைப்புச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அதன் தலைவா் கொக்குமடை டி. ரமேஷ், முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்: மேட்டூா் அணையில் இருந்து கடந்த செப். 1-ஆம்தேதி தண்ணீா் திறந்துவிடப்பட்டு 40 நாள்கள் நிறைவடைந்துவிட்டது. தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது. கடைமடைக்கு தண்ணீா் வந்து சேரவில்லை. தற்போது 65 அடிக்கு தண்ணீா் மேட்டூரில் உள்ளது. கடந்த காலங்களில் 40 அடி தண்ணீா் இருந்தபோதும் விவசாயத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

தற்போதுவரை கா்நாடகம் தமிழ்நாட்டுக்கு 814 டிஎம்சி தண்ணீா் தர வேண்டியுள்ளது. எனவே, தினமும் ஒரு டிஎம்சி தண்ணீரை கா்நாடகத்திடமிருந்து பெற வேண்டும். இதற்காக தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அழுத்தம் கொடுக்க வேண்டும்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments