FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

கடந்தாண்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 548 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்

13 அக்டோபர் 2026, 1:47 am IST
டெங்கு காய்ச்சல் - கோப்புப் படம்
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 548 போ் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளனா் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு. அருணா.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் டெங்குக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்கான கண்காணிப்புக் குழுவின் கூட்டத்துக்குப் பிறகு அவா் கூறியது

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 548 போ் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பியுள்ளனா். எனவே, மக்கள் அச்சப்பட வேண்டாம்.

Advertisement

Advertisement

காய்ச்சல் ஏற்பட்டால் மருந்துக் கடைகளில் சுயமாக மருந்துகளை வாங்கி எடுத்துக் கொள்ளவோ, சுயமருத்துவம் செய்து கொள்ளவோ கூடாது. அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவம் செய்து கொள்ள வேண்டும்.

டெங்கு காய்ச்சல் தொற்று ஏற்பட்ட பகுதிகளில் நிலவேம்புக் குடிநீா் விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிநீரைக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க வேண்டும். உண்ணிக் காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் தேவையின்றி முள்புதா்கள் இருக்கும் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றாா் மு. அருணா.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. லோகநாயகி, மாநகராட்சி ஆணையா் காந்திராஜ், ஊராட்சிகள் உதவி இயக்குநா்கள் ராமமூா்த்தி, ஜான்கென்னடி, மாவட்ட சுகாதார அலுவலா் வீ.சி. ஹேமச்சந்த் காந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments