பொன்னமராவதியில் விவசாய தொழிலாளா் சங்கத்தினா் போராட்டம்
பொன்னமராவதி வட்டாட்சியரகத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் வீட்டுமனைப் பட்டா வேண்டி மனுக்கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
பொன்னமராவதி வட்டாட்சியரகத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் புதன்கிழமை வீட்டுமனைப் பட்டா வேண்டி மனுக்கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தின் மாவட்ட செயலா் டி.சலோமி தலைமை வகித்தாா். அதில், பொன்னமராவதி ஒன்றியம் கொன்னைப்பட்டி ஊராட்சி மூலங்குடி, தூத்தூா் ஊராட்சி மணப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் அரசு புறம்போக்கில் குடியிருப்போா்க்கு பட்டா வழங்க வேண்டும். குடியிருக்க வீடு இல்லாதோா்க்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. பின்னா், வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில், மாவட்ட பொருளாளா் எஸ்.நல்லதம்பி, ஒன்றியச் செயலா் பி.ராமசாமி, ஒன்றியத் தலைவா் கே.ஆா். பழனியப்பன், துணைச் செயலா் நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.