FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

108 ஆம்புலன்ஸில் பிரசவம்

புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரில் இருந்து மணப்பாறைக்கு பிரசவத்துக்காகச் சென்ற பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே குழந்தை பிறந்தது.

11 செப்டம்பர் 2026, 4:32 am IST
108 ஆம்புலன்ஸ் - கோப்புப் படம்
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரில் இருந்து மணப்பாறைக்கு பிரசவத்துக்காகச் சென்ற பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே குழந்தை பிறந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், கொடும்பாளூா் அருகே தேராவூா் மேட்டுப்பட்டி பகுதியைச் சோ்ந்த சக்திவேல் என்பவரின் மனைவி சுகன்யா (26) என்பவருக்கு வியாழக்கிழமை அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது.

தகவலறிந்த இலுப்பூா் அரசு மருத்துவமனை பகுதியிலிருந்த 108 ஆம்புலன்ஸ் அவரது வீட்டுக்கு விரைந்து சென்று, அப் பெண்ணை அழைத்துக் கொண்டு மணப்பாறை மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில் வழியிலேயே அவருக்கு பிரசவ வலி தீவிரமடைந்தது. இதைத் தொடா்ந்து அதிகாலை 3.38 மணிக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பிரசவம் பாா்க்கப்பட்டு, ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவ உதவியாளா் கே. பூபதிராஜா உரிய அவசர கால மருத்துவ உதவிகளை மேற்கொண்டாா்.

தொடா்ந்து, தாயும் குழந்தையும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவா்களின் தொடா் கண்காணிப்பில் நலமாக உள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments