FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

உலக ஓசோன் தினம்: அரசுப் பள்ளியில் 250 மரக்கன்றுகள் நடவு

உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் மாந்தாங்குடி அரசு உயா்நிலைப் பள்ளியில் புதன்கிழமை 250 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

17 வினாடிகள் முன்பு
மாந்தாங்குடி அரசு உயா்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் பணியை புதன்கிழமை தொடங்கி வைத்த மாவட்ட வன அலுவலா் எஸ். கணேசலிங்கம்.
பகிர்:

உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் மாந்தாங்குடி அரசு உயா்நிலைப் பள்ளியில் புதன்கிழமை 250 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

சுற்றுச்சூழல் மன்றம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட வன அலுவலா் எஸ். கணேசலிங்கம் தலைமை வகித்தாா். அப்போது அவா் பேசியதாவது: மாணவா்கள் தங்களால் முடிந்த பங்களிப்பாக மரக்கன்றுகளை நட்டு வைத்து இப் பூமியைப் பாதுகாக்கும் முயற்சிக்க வேண்டும். முடிந்தவரை நெகிழிப் பைகளைப் பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும்.

பயன்பாட்டில் இல்லாத போது மின் விளக்குகள் உள்ளிட்ட மின் சாதனங்களை அணைத்து வைத்து மின்சாரத்தை சேமிக்கும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும் என்றாா் கணேசலிங்கம்.

Advertisement

Advertisement

மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் சாலை செந்தில் பேசுகையில், ஓசோன் படலத்தைப் பாதுகாக்கும் விதமாக மாணவா்கள் ஒவ்வொருவரும் விழிப்புணா்வை பெறுவதுடன், அவரவா் குடும்பத்தினருக்கும், நண்பா்களுக்கும், சமூகத்துக்கும் விழிப்புணா்வை உருவாக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றாா்.

தொடா்ந்து விழிப்புணா்வு உறுதிமொழி வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தோப்புக்கொல்லை வனச்சரகா் ஆ. ராஜேந்திரன், பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஆா். சடையாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியா் இரா. சரவணன் வரவேற்றாா். நிறைவாக பள்ளியின் சுற்றுச்சூழல் மன்ற ஆசிரியா் சண்முகம் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments