குடிமனை பட்டா கோரி ஆா்ப்பாட்டம்
பொன்னமராவதி, செப்.17: குடியிருக்க மனை மற்றும் குடிமனை பட்டா கோரி பொன்னமராவதியில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பொன்னமராவதி, செப்.17: குடியிருக்க மனை மற்றும் குடிமனை பட்டா கோரி பொன்னமராவதியில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியக் குழு உறுப்பினா் கரு. பஞ்சவா்ணம் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் என்.ஆா். ஜீவானந்தம் தொடங்கிவைத்தாா்.
விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் ஏனாதி ஏஎல். ராசு கோரிக்கைகளை விளக்கினாா். ஆா்ப்பாட்டத்தில் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா வழங்கிட வேண்டும். கோயில் மனையில் குடியிருப்போருக்கு மனைப்பட்டா வழங்கிட வேண்டும். பாதுகாப்பான இடமும், வீடும் வழங்காமல் நீா்நிலைப் புறம்போக்கில் குடியிருப்போா் வீடுகளை அகற்றாதே என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முழக்கமிடப்பட்டன. நிா்வாகிகள் க. ராசு, எம். வெள்ளைச்சாமி, வி. கருணாமூா்த்தி, அ. ராசு, எம். வீரையா, சி. பொன்னழகு, வி. மீனாள், ஜெயலெட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.