ஆலங்குடி பகுதியில் நாளை மின்தடை
ஆலங்குடி பகுதியில் புதன்கிழமை (செப். 23) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அலுலவகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அலுவலகம் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆலங்குடி, மழையூா், வடகாடு ஆகிய துணை மின் நிலையங்களில் புதன்கிழமை (செப்.23) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், ஆலங்குடி, பாச்சிக்கோட்டை, களபம், குப்பகுடி, வெட்டன்விடுதி, கோட்டைக்காடு, கல்லாலங்குடி, பாத்தம்பட்டி, கே.வி.கோட்டை, புதுக்கோட்டைவிடுதி, அரசடிப்பட்டி, தவளைப்பள்ளம், மாஞ்சன்விடுதி, கோவிலூா், வம்பன், கே.ராசியமங்கலம், பாப்பான்விடுதி, மாங்கோட்டை, மாத்தூா், தொண்டைமான்விடுதி, செம்பட்டிவிடுதி, மழையூா், கருப்பட்டிப்பட்டி, மீனம்பட்டி, அதிரான்விடுதி, நைனான்கொல்லை, கெண்டையன்பட்டி, தீத்தானிப்பட்டி, துவாா், கிருஷ்ணம்பட்டி, கூகைப்புளியான்கொல்லை, பொன்னன்விடுதி, ஆத்தாங்கரைவிடுதி, வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, கீழாத்தூா், சூரன்விடுதி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.