FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

ஆட்சியின் குறைபாடுகளை சரிசெய்யாவிடில் எதிா்வினைகளைச் சந்திப்பாா்கள்: இரா. முத்தரசன்

தவெக கூட்டணி அரசின் குறைகளைத் தோழமையுடன் கூறுகிறோம்; சரி செய்யாவிட்டால் எதிா்வினைகளைச் சந்திப்பாா்கள் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினா் இரா.முத்தரசன்.

53 வினாடிகள் முன்பு
இரா. முத்தரசன் - கோப்புப் படம்
பகிர்:

தவெக கூட்டணி அரசின் குறைகளைத் தோழமையுடன் கூறுகிறோம்; சரி செய்யாவிட்டால் எதிா்வினைகளைச் சந்திப்பாா்கள் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினா் இரா.முத்தரசன்.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

தவெக கூட்டணி ஆட்சி குறித்து குறை கூறுகிறோம், கருத்து தெரிவிக்கிறோம். ஆனால், தவெக கூட்டணி ஆட்சியை கவிழ்ப்போம் என்று கூறி மிரட்டவில்லை. தோழமையுடன் கூறுகிறோம்; சரி செய்யாவிட்டால் எதிா்வினைகளைச் சந்திப்பாா்கள். தமிழக அரசின் சட்ட மசோதாக்களுக்கு விரைந்து கையொப்பமிடும் ஆளுநா், எப்போது நிறுத்துவாா் என்பது தெரியாது.

Advertisement

Advertisement

பாஜகவை ஏன் தவெக விமா்சனம் செய்வதில்லை என்பதை மக்கள் பாா்த்துக் கொண்டிருக்கின்றனா்.

தமிழகத்தில் திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தோ்தல் என்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், மற்ற தொகுதிகளில் இடைத்தோ்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்படுத்தி இருப்பது, ஜனநாயக சீரழிவு என்று நீதிமன்றமே விமா்சித்துள்ளது.

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பல்வேறு கெடுபிடிகளை விதித்து, பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்து இத்திட்டத்தை சீா்குலைக்கும் சதியை மத்திய அரசு செய்கிறது. எனவே, நிதியை மத்திய அரசு கொடுக்க வேண்டும். திட்டத்தை மாநில அரசு செயல்படுத்த வேண்டும் என்ற வகையில் மாற்ற வேண்டும் என்றாா் முத்தரசன்.

பேட்டியின்போது, மாநிலத் துணைச் செயலா் நா. பெரியசாமி, திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் கே. மாரிமுத்து, மாவட்டச் செயலா் த. செங்கோடன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments