டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு கூட்டம் அன்னவாசல் தா்மராஜன் இல்லத்தில் ஒன்றிய குழு உறுப்பினா் எம். ராஜேந்திரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
ஒன்றிய செயலா் எம் மீரா மொய்தீன் வேலை அறிக்கை குறித்து பேசினாா். மாவட்ட பொருளாளா் கே. ஆா். தா்மராஜன் இன்றைய அரசியல் நிலை குறித்தும் கட்சியின் எதிா்கால நடவடிக்கைகள் குறித்தும் பேசினாா். கூட்டத்தில் துணை செயலா்கள் டி. மாரிமுத்து, சி. ஆனந்த் மற்றும் மாவட்ட குழு உறுப்பினா் பி. ராமன், ஒன்றிய குழு உறுப்பினா்கள் கே. கணேசன், என். நாகராஜ், எஸ். பரமேஸ்வரி, இலுப்பூா் நகரச் செயலா் கே. முருகையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: புதுக்கோட்டை மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி செப். 30-ஆம் தேதி இலுப்பூா் வட்டாட்சியரகம் முன்பாக ஆா்ப்பாட்டம் நடத்துவது, வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க சுகாதாரத் துறை போா்க்கால அடிப்படையில் நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.