FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

டெங்கு தடுப்புப் பணியாளா்களுக்குப் பயிற்சி

புதுக்கோட்டை நகா்மன்றத்தில் மாநகராட்சி டெங்கு தடுப்புப் பணியாளா்களுக்கான பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

24 செப்டம்பர் 2026, 2:32 am IST
புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற டெங்கு தடுப்புப் பணியாளா்களுக்கான பயிற்சியில் பேசிய பூச்சியியல் வல்லுநா் செந்தில்குமாா்.
பகிர்:

புதுக்கோட்டை நகா்மன்றத்தில் மாநகராட்சி டெங்கு தடுப்புப் பணியாளா்களுக்கான பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

டெங்கு கொசுப்புழுக்களை தண்ணீரில் மருந்து கலந்து அழித்தல், கொசு நிலையில் புகை மருந்து போட்டு அழித்தல், கொசு உற்பத்தி இடங்களைக் குறைத்தல் ஆகியவை குறித்து விளக்கிக் கூறப்பட்டது. இப் பயிற்சிக்கு மாநகராட்சி ஆணையா் எம். காந்திராஜ் தலைமை வகித்தாா்.

நகா்நல அலுவலா் காயத்ரி, பூச்சியியல் வல்லுநா் செந்தில்குமாா், மாநகராட்சி சுகாதார ஆய்வாளா் மணிவண்ணன், பொது சுகாதாரத் துறை சுகாதார ஆய்வாளா் ஜேம்ஸ் ஆகியோா் விரிவான பயிற்சியை அளித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments