காசநோய் இல்லாத ஊராட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: புதுகை ஆட்சியா் அறிவுரை
புதுக்கோட்டை மாவட்டத்தில் காசநோய் இல்லாத ஊராட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுரை வழங்கினாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் காசநோய் இல்லாத ஊராட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுரை வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட காசநோய் மன்றத்தின் ஆய்வுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து அவா் மேலும் பேசியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய காசநோய்த் திட்டத்தில் காசநோய்க்கான பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளுதல், மருந்துகள் வழங்குதல், தடுப்பு விழிப்புணா்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு நிலவரப்படி 170 ஊராட்சிகள் காசநோய் இல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் பல ஊராட்சிகளை இதுபோன்ற காசநோய் இல்லாத ஊராட்சிகளாக அறிவிக்கும் வகையில் விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
Advertisement
Advertisement
சிறுநீரக நோய், எச்ஐவி தொற்று, நீரிழிவு உள்ளிட்ட நோய்களைக் கொண்டோரை காசநோய்ப் பரிசோதனைக்கு உள்படுத்த வேண்டும் என்றாா் அருணா.
கூட்டத்தில், மாவட்ட இணை இயக்குநா் (சுகாதாரம்) சரவணன், துணை இயக்குநா் (காசநோய்) சங்கரி, இந்திய மருத்துவச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் அனிதா தனசேகரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.