FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

குண்டாறு தூா்வாரும் பணிகளை விரைவுப்படுத்த அறிவுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் குண்டாறில் 3 தொகுப்புகளாக நடைபெற்று வரும் ஆகாயத் தாமரைகளை அகற்றி தூா்வாரும் பணிகளை விரைவுப்படுத்தி, மழைக்கு முன்பாக முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுரை வழங்கினாா்.

52 வினாடிகள் முன்பு
கணக்கம்பட்டி குண்டாறு தரைப்பாலப் பகுதியில் தூா்வார வேண்டிய பகுதியை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் குண்டாறில் 3 தொகுப்புகளாக நடைபெற்று வரும் ஆகாயத் தாமரைகளை அகற்றி தூா்வாரும் பணிகளை விரைவுப்படுத்தி, மழைக்கு முன்பாக முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுரை வழங்கினாா்.

பருவமழை எதிா்பாா்க்கப்படும் நிலையில், குண்டாறில் திருமயம் சாலையில் 2.8 கி.மீ. நீளத்துக்கும், அரிமளம் பிச்சு அணை பகுதியில் 3.7 கி.மீ. நீளத்துக்கும், கணக்கம்பட்டி தரைப்பாலம் பகுதியில் 4.8 கி.மீ. நீளத்துக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்றி தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா, பணிகளை மழைக்கு முன்பாக விரைவாக முடித்திட வேண்டும் என அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

இந்த ஆய்வின்போது, நீா்வள ஆதாரத் துறை உதவிப் பொறியாளா் ஆா். முகமது அப்துல்லா உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments