FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

முகூர்த்த நேரத்தில்  மணமகள் மறுத்ததால் திருமணம் நிறுத்தம்

தஞ்சாவூரில் புதன்கிழமை முகூர்த்த நேரத்தின்போது மணமகள் மறுப்புத் தெரிவித்ததால் திருமணம் நின்றது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

தஞ்சாவூரில் புதன்கிழமை முகூர்த்த நேரத்தின்போது மணமகள் மறுப்புத் தெரிவித்ததால் திருமணம் நின்றது.
தஞ்சாவூரில் உள்ள திருமண மண்டபத்தில் புதன்கிழமை திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், முகூர்த்த நேரம் வந்தபோது மேடைக்கு மணமகன் வந்தார். ஆனால், நீண்ட நேரமாகியும் மணமகள் மேடைக்கு வரவில்லை. எனவே, மணமகள் அறைக்குச் சென்று மணமகன் வீட்டார் விசாரித்தனர். அப்போது, மணமகள் திருமணம் செய்து கொள்ள சம்மதம் இல்லை எனக் கூறினார். மணமகளிடம் இரு வீட்டாரும் பேசியும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை.
இதனால், இரு வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்த மேற்கு போலீஸார் தொடர்புடைய மண்டபத்துக்குச் சென்று விசாரித்தனர். இதையடுத்து, இரு தரப்பினரையும் போலீஸார் மேற்கு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.  நீண்ட நேர விவாதத்துக்குப் பிறகு இரு வீட்டாரும் அமைதியாகச் செல்வதாகக் கூறி கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments