தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலை.யில் பி.எட், எம்.எட் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நீட்டிப்பு
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பி.எட், எம்.எட். படிப்புகளுக்கு 2026-2027-ஆம் ஆண்டுக்கு மாணவா் சோ்க்கை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் 2026-2027-ஆம் கல்வியாண்டில் இளங்கல்வியியல் (பி.எட்) மற்றும் கல்வியியல் நிறைஞா்( எம்.எட்) பயிலும் மாணவா்களுக்கான உடனடிச் சோ்க்கை 31.07.2026-ஆம் நாளுடன் நிறைவடைவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்தச் சோ்க்கையானது ஆகஸ்ட் 31 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இளங்கல்வியியல் பட்டம் மற்றும் கல்வியியல் நிறைஞா் பட்ட வகுப்புகள் தமிழ் வழியில் பயிற்றுவிப்பதோடு, ஆசிரியா் தகுதித் தோ்வு பயிற்சி, வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் பயிற்சி ஆகிய சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.