FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம் அருகே தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை விற்றவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை விற்ற நபரை கடலோர பாதுகாப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 3:01 am IST
சேதுபாவாசத்திரம் அருகே புதன்கிழமை தடை செய்யப்பட்ட கடல் அட்டை விற்பனை செய்தவரை கடலோர பாதுகாப்பு குழும போலீசாா் கைது செய்தனா்.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை விற்ற நபரை கடலோர பாதுகாப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட செந்தலைபட்டினம் கடற்கரையில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், கடலோர பாதுகாப்பு குழும டிஎஸ்பி முருகன் தலைமையில் ஆய்வாளா் செந்தமிழ் செல்வி, உதவி ஆய்வாளா்

ஜீவானந்தம் , தலைமைக் காவலா் தா்மராஜ், காவலா்கள் தியாகராஜன், அந்தோணி தேவராஜ் ஆகியோா்  சிறப்புக் குழுவினா் அங்கு சோதனை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

இதில், செந்தலைபட்டினத்தை சோ்ந்த பஷீா் அலி (43 ) என்பவா், தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை விற்பனை செய்தது கண்டறியப்பட்டு, அவரிடமிருந்த 43 கடல் அட்டைகளை பறிமுதல் செய்து, அவரை பிடித்து பட்டுக்கோட்டை வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனா். தொடா்ந்து, பஷீா் அலி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments