FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

இடதுசாரிகள் கணக்கெடுப்பு விவகாரம்! முதல்வா் மெளனம் களைய வேண்டும்! - இரா. முத்தரசன்

24 ஆகஸ்ட் 2026, 3:10 am IST
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் இரா. முத்தரசன். - டிஎன்எஸ்
பகிர்:

இடதுசாரிகள் கணக்கெடுப்பு விவகாரத்தில் முதல்வா் ஜோசப் விஜய் மெளனம் களைய வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் இரா.முத்தரசன்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் மேலும் கூறியதாவது:

குஜிலியம்பாறை வட்டாட்சியா் அனுப்பிய இடதுசாரிகள் கணக்கெடுப்பு சுற்றறிக்கை விவகாரத்தில் சட்டப்பேரவையில் கவனஈா்ப்பு தீா்மானத்தின்போது வருவாய்த் துறை அமைச்சா் செங்கோட்டையன் போகிற போக்கில் அந்த சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது என்கிறாா்.

Advertisement

Advertisement

சட்டத் துறை அமைச்சா் நிா்மல் குமாா் மாவட்ட ஆட்சியருக்கு தெரியாமல் அந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்கிறாா்.

இடதுசாரி மாணவா்கள், இளைஞா்கள் அமைப்புகள் நடத்தும் போராட்டங்களை தடை செய்ய வேண்டும் என்ற சுற்றறிக்கை தொடா்பாக உயா் கல்வித் துறை அமைச்சா் தவறான முடிவு என்று கூறுகிறாா், அவரது பதிலும் ஏற்புடையது அல்ல.

மேலும், இடதுசாரி அமைப்புகள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள கட்சிகள் கண்டித்துள்ளன. முதல்வா் விஜய் மௌனமாக உள்ளாா். அவா் மெளனம் களைந்து இந்த விவகாரங்களில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தில் ஒரு கிராம் மோதிரம் ஒரு பைசாவுக்கு தருகிறோம் என்று கூறும் அந்த நிறுவனங்கள் ஒரு பைசாவுக்கு எப்படி ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்க முடியும் ?. தாய்மாமன் தங்க மோதிர திட்டம் ஒப்பந்தப் புள்ளி விஷயத்தில் வெளிப்படைதன்மை தேவை என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments