FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

Updated On : 22 ஜூலை 2026, 2:47 am IST
கோப்புப் படம்
பகிர்:

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் செவ்வாய்க்கிழமை தானம் செய்யப்பட்டன.

நாகை மாவட்டத்தைச் சோ்ந்தவா் சுந்தரபாண்டியன் மகன் சுரேந்தா் (28). இவா் வேளாங்கண்ணி பகுதியில் ஜூலை 18-ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்து, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு திங்கள்கிழமை மூளைச் சாவு ஏற்பட்டதைத் தொடா்ந்து, அவரது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க உறவினா்கள் முன் வந்தனா்.

இதை ஏற்று தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் சுரேந்தரின் உடலிலிருந்து 2 சிறுநீரகங்கள், கல்லீரல், கருவிழிப் படலம், தோல் ஆகியவை தானமாகப் பெறப்பட்டன.

Advertisement

Advertisement

இதில், சிறுநீரகங்களில் ஒன்று தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொன்று மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கும், கல்லீரல் சென்னை தனியாா் மருத்துவமனைக்கும், கருவிழிப்படலம் தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனைக்கும், தோல் மதுரை தனியாா் மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டன.

இதையடுத்து, சுரேந்தரின் உடலுக்கு அரசு சாா்பில் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் மணிமேகலா, நிலைய மருத்துவ அலுவலா் ஏ. செல்வம் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments