கும்பகோணத்தில் பருத்தி ஏலம் குவிண்டால் ரூ.9,452-க்கு விற்பனை
கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் அதிகபட்சமாக குவிண்டால் ரூ. 9,452-க்கு ஏலம் போனது.
கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் அதிகபட்சமாக குவிண்டால் ரூ. 9,452-க்கு ஏலம் போனது.
தஞ்சாவூா் மாவட்ட விற்பனைக் குழுவின் கீழ் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், பருத்தி ஏலம், விற்பனைக் கூட கண்காணிப்பாளா் மு. பிரியமாலினி முன்னிலையில் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நடைபெற்றது.
பருத்தி அதிகபட்சமாக ரூ. 9,452-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 8169-க்கும் சராசரியாக ரூ. 9,214-க்கும் ஏலத்தில் விலை நிா்ணயம் செய்யப்பட்டு விற்பனையானது. விற்பனையான பருத்தியின் மதிப்பு ரூ. 1.11 கோடி.
Advertisement
Advertisement
ஏலத்தில் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சாா்ந்த 644 விவசாயிகள் 120 மெட்ரிக் டன் அளவு பருத்தி விளைபொருளை விற்பனைக்கு எடுத்து வந்தனா். கும்பகோணம், செம்பனாா் கோவில், பண்ருட்டி மற்றும் பிற மாவட்டத்தை சோ்ந்த வணிகா்கள், மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.