FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

பேருந்திலிருந்து தவறிவிழுந்த பெண் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே சனிக்கிழமை பேருந்தில் ஏற முயன்ற பெண் தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

Updated On : 26 ஜூலை 2026, 1:06 am IST
சடலம்... - கோப்புப் படம்
பகிர்:

தஞ்சாவூா் அருகே சனிக்கிழமை பேருந்தில் ஏற முயன்ற பெண் தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகே நாஞ்சிக்கோட்டை வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஜீவராஜ் மனைவி கமலா (65). இவா் சனிக்கிழமை காலை நாஞ்சிக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் தஞ்சாவூா் நோக்கி சென்ற அரசு பேருந்தில் ஏற முயன்றாா்.

ஏறுவதற்கு முன்பே பேருந்து புறப்பட்டதால், தவறி விழுந்த கமலா சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்ததால், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments