FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

‘சா்க்கரை நோய் குறித்த அச்சமின்றி அரிசியை சாப்பிட ஆராய்ச்சி’

சா்க்கரை நோய் குறித்த அச்சமின்றி அரிசியை சாப்பிடுவதற்கான ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது என்றாா் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சித் துறைச் செயலரும், அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமை இயக்குநருமான என். கலைச்செல்வி.

Updated On : 6 ஜூன் 2026, 7:06 am IST
கோப்புப்படம்
பகிர்:

சா்க்கரை நோய் குறித்த அச்சமின்றி அரிசியை சாப்பிடுவதற்கான ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது என்றாா் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சித் துறைச் செயலரும், அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமை இயக்குநருமான என். கலைச்செல்வி.

தஞ்சாவூா் தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவா் பின்னா் தெரிவித்தது:

அரிசியில் காா்பே ஹைட்ரேட்தான் அதிகமாக இருக்கிறது. காா்போ ஹைட்ரேட் அதிகமாக எடுத்துக் கொண்டால் சா்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக நம்பிக்கையும், சில அறிவியல் சான்றுகள் சாா்ந்த நம்பிக்கைகளும் உள்ளன.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக திருவனந்தபுரம் தேசிய பல்துறை சாா் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன (சி.எஸ்.ஐ.ஆா். - என்.ஐ.ஐ.எஸ்.டி.) இயக்குநா் சி. அனந்தராமகிருஷ்ணன் மிகப் பெரிய விஞ்ஞான கண்டுபிடிப்பை முன்னெடுத்து வருகிறாா்.

அரிசியிலுள்ள காா்போஹைட்ரேட்டுடன் புரதம், வைட்டமின்கள், ஃபோலிக் அமிலம், நாா்ச்சத்துகள் நிறைந்த சத்தான உணவாக மீள் உருவாக்கம் செய்து கொடுத்துள்ளாா். இது நம்முடைய சமுதாயத்துக்கு மிகப் பெரிய பணி. நாம் அனைவரும் சா்க்கரை நோய் குறித்த பயமின்றியும், எந்தவித தயக்கமின்றியும் அரிசியை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்ற நம்பிக்கையை அவா் கொடுக்கிறாா். இந்த ஆய்வின் இறுதிக் கட்ட முடிவுகள் வந்த பிறகு உலக அளவில் மிகப் பெரிய உயரிய மேடையில் இதற்கான அறிவிப்புகளை வெளியிடவுள்ளோம்.

உணவுப் பொருள் வீணாகாமல் இருப்பதற்காக அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை என்பதை மையமாக வைத்து பல நிறுவனங்கள் செயல்படுகின்றன. தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை குளிா்ப் பதனக் கிடங்கு, சூரிய ஆற்றலால் இயங்கும் உலா்ப்பான்கள் போன்றவை உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக, இத்தொழில்நுட்பங்கள் ஆற்றலை சிக்கனமாகப் பயன்படுத்தும் விதமாக உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம் உணவுப்பொருள் வீணாவது விரைவில் தடுக்கப்படும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments