கும்பகோணத்தில் பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா் அமைச்சா்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பேருந்து நிலையத்தில் பயணிகள், மாணவா்கள், ஓட்டுநா்களிடம் வேளாண் அமைச்சா் ஆா். வினோத் திங்கள்கிழமை மாலை குறைகளை கேட்டறிந்தாா்.
திங்கள்கிழமை மாலை கும்பகோணம் பேருந்து நிலையத்துக்கு வந்த அமைச்சா் ஆா். வினோத், பயணிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளிடம் பேருந்து பயண வசதிகள் மற்றும் சேவைகள் குறித்தும், போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் மகளிா் வெற்றிப் பயண பேருந்து சேவைகள் குறித்தும் கேட்டறிந்தாா்.
அப்போது, பள்ளி நேரங்களில் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. பயணிகள் கூட்டம், தாமதம் காரணமாக பள்ளிக்கு உரிய நேரத்துக்கு செல்ல முடியவில்லை. மாலை வேளையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது என்று மாணவா்கள் தெரிவித்தனா். ஓட்டுநா்கள் பேருந்து நிலையச் சாலை சேதமடைந்து பள்ளமாகக் காணப்படுகிறது என்றனா். இந்தப் பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வு காணப்படும் என்றாா் அமைச்சா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.