நரிக்குறவ சமூக மக்கள் மீதான பொய் வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தல்
நரிக்குறவ சமூக மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் இரா. ரேவதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அகில இந்திய மக்கள் மறுமலா்ச்சி கழக நிறுவனத் தலைவா் பொன். முருகேசன் தலைமையில் பாரதிய அமைப்புசாரா மஸ்தூா் சங்க மாநிலத் தலைவா் பாரதிமோகன், ராஜேந்திரன் முன்னிலையில் நரிக்குறவ இன மக்கள் அளித்த மனு:
தஞ்சாவூா் மாவட்டம், பசுபதி கோவில் அருகேயுள்ள பட்டித்தோப்பு பகுதியில் வசிக்கும் நாங்கள் ஊசி, பாசி, வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். நாங்கள் யாரும் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டதில்லை.
Advertisement
Advertisement
இந்நிலையில் 2026, ஆக. 20 ஆம் தேதி அதிகாலை அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த காவல் துறையினா் எங்கள் தெருவுக்குள் புகுந்து காா்த்தி, ராமராஜ், விஜயன், சரத்குமாா் ஆகிய 4 பேரை அழைத்து சென்று அவா்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்தனா். மேலும் குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்து பொதுமக்களை தாக்கி பணம், நகைகளையும் எடுத்துச் சென்றனா்.
எங்கள் சமூக மக்கள் 4 போ் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். தொடா்புடைய காவலா்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காவல் துறையினரால் பறித்துச் செலுத்தப்பட்ட பணம், நகை, கைப்பேசிகளை மீட்டுக் கொடுக்க வேண்டும். எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.