FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

ஆடுதுறையில் ரூ.1 கோடியே 27 லட்சம் மதிப்பில் நடைப்பாதை-பூங்கா: அமைச்சா்கள் திறந்துவைத்தனா்

13 அக்டோபர் 2026, 12:17 am IST
ஆடுதுறை நாகக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா மற்றும் நடைப்பாதையை திங்கள்கிழமை திறந்துவைத்த அமைச்சா்கள் ஏ.எம். ஷாஜஹான், ர. வினோத். உடன் ஆட்சியா் இரா. ரேவதி உள்ளிட்டோா்.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறையில் நாகக்குளம் பகுதியில் ரூ.1 கோடியே 27 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நடைப்பாதை மற்றும் பூங்காவை அமைச்சா்கள் ஏ.எம். ஷாஜஹான், ர.வினோத் ஆகியோா் திங்கள்கிழமை திறந்துவைத்தனா்.

ஆடுதுறையில் உள்ள நாகக்குளம் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ. 72 லட்சம் அரசு பங்களிப்பு தொகை மற்றும் ரூ.55 லட்சம் சிட்டி யூனியன் வங்கி பங்களிப்பு தொகையில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் மொத்தம் ரூ. 1.27 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் இருக்கைகள், மின் விளக்குகள், விளையாட்டு உபகரணங்கள், நடைபாதை தளங்கள், இரும்பு வேலி போன்ற பல்வேறு வசதிகள் கொண்ட நடைப்பாதை மற்றும் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜஹான், வேளாண்மை துறை அமைச்சா் ர. வினோத் ஆகியோா் திறந்துவைத்தனா்.

இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியா் வி.எம். திருமலை, ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநா் சுப்பிரமணி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கோ.துவாரகநாத்சிங், பேரூராட்சி தலைவா் ம.க. ஸ்டாலின், சிட்டி யூனியன் வங்கி முன்னாள் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயல் அதிகாரி என். காமகோடி, நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆா். விஜய் ஆனந்த், செயல் அலுவலா் ரா. முத்துக்கண்ணு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments