மக்கள் நோ்காணல் முகாம்: 1,999 மனுக்களின் நகல்களுடன் மனு கொடுக்க வந்தவரால் பரபரப்பு
சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ஊமத்தநாடு ஊராட்சி, உடையநாட்டில் புதன்கிழமை ஆட்சியா் பங்கேற்ற மக்கள் நோ்காணல் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு, ஏற்கெனவே தான் அளித்த 1999 மனுக்களின் நகல்கள் மற்றும் ஒப்புகை ரசீதுகளை மூட்டைபோல் தலையில் சுமந்து வந்து மனு அளித்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.
பேராவூரணி அருகே உள்ள கழனிவாசல் கிராமத்தைச் சோ்ந்தவா் கேசவன் (74). இவா், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பெரியகத்திக்கோட்டை கிராமத்தில் தனக்குச் சொந்தமான நிலத்தை சிலா் ஆக்கிரமித்துள்ளதாகவும், அதை மீட்டுத் தர வேண்டும் என்று, தவெக கட்சித் துண்டை தலையில் கட்டியபடி மனு நகல்கள் மற்றும் ரசீதை தலையில் சுமந்து வந்து ஆட்சியரிடம் மனு அளித்தாா்.
இதுகுறித்து கேசவன் கூறியது: கடந்த 20 ஆண்டுகளாக சுமாா் 1,999 மனுக்களை பல்வேறு ஆட்சியா்களிடம் வாரந்தோறும் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டங்களில் அளித்தும், 42 முறை தற்கொலை போராட்டம் அறிவித்தும் இதுவரை எனது நிலம் ஆக்கிரமிப்பு தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
Advertisement
Advertisement
இன்று கொடுத்துள்ள 2,000-ஆவது மனு மீதும் நடவடிக்கை எடுக்காவிட்டால்,
2027 குடியரசு தின நாளில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் நீதியரசா் முன்பாக குடும்பத்தினருடன் உயிரைவிடுவோம் என்றாா்.
மேலும், கழனிவாசல் கிராமத்தில் சட்டவிரோதமாக வழங்கப்பட்ட குடிநீா் இணைப்பை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.