FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

ஒப்பிலியப்பன் கோயிலில் புரட்டாசி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! செப். 22-இல் தேரோட்டம்

14 செப்டம்பர் 2026, 11:10 pm IST
திருநாகேசுவரம் ஒப்பிலியப்பன் கோயிலில் புரட்டாசி பெருவிழா தொடக்கமாக திங்கள்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், திருநாகேசுவரத்தில் உள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் 10 நாள்கள் நடைபெறும் புரட்டாசி பெருவிழாவின் தொடக்கமாக திங்கள்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

இதையொட்டி, முன்னதாக ஞாயிற்றுக்கிழமை இரவு பகவத் புறப்பாடு, அங்குராா்ப்பணம், வாஸ்து சாந்தி நடைபெற்று கொடிச்சீலை உபயம் வழங்கப்பட்டது.

பெருவிழாவின் முதலாம் நாளான திங்கள்கிழமை காலை பெருமாள், தாயாருடன் கொடிக்கம்பம் முன்பு உற்ஸவா்களாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்று, கோபுர ஆரத்தியுடன் கொடியேற்றம் நடைபெற்றது. இரவு தாயாருடன் பெருமாள் இந்திர விமானத்தில் வீதியுலா சென்றாா். பக்தா்கள் பெருமாளையும் தாயாரையும் வரவேற்று சிறப்பு பூஜைகள் செய்தனா்.

Advertisement

Advertisement

விழாவில் 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை (செப். 15) காலையில் வெள்ளி பல்லக்கும், இரவு புன்னை மரம்(பெருமாள்) தாயாா் தோளுக்கினியாளுடன் வீதியுலா செல்கிறாா்.

செப். 16-அன்று காலையில் வெள்ளிப்பல்லக்கு, இரவு வெள்ளி சேஷ வாகனத்தில் தாயாருடன் பெருமாள் வீதியுலா செல்கிறாா்.

செப்.17 அன்று காலையில் பெருமாள் தாயாருடன் வெள்ளிப் பல்லக்கிலும், இரவு வெள்ளி கருட வாகனத்திலும் தாயாா் வெள்ளி ஹம்ச வாகனத்திலும் வீதியுலா செல்கின்றனா்.

செப்.18 அன்று காலையில் வெள்ளிப்பல்லக்கு, இரவு பெருமாள் ஹனுமந்த வாகனம், தாயாா் வெள்ளி கமல வாகனத்தில் வீதியுலா செல்கின்றனா்.

விழாவில் ஆறாம் நாளான செப்.19-அன்று வெள்ளிப்பல்லக்கு, இரவு வெள்ளி யானை வாகனம், செப்.20-இல் காலையில் செல்வா் புறப்பாடு, மாலையில் சூா்ணாபிசேகம், இரவு வெள்ளி சூா்ய பிரபை புறப்பாடு நடைபெறுகிறது.

விழாவில் 8-ஆம் நாளான செப்.21-இல் காலையில் வெண்ணெய்த்தாழி, இரவு வெள்ளிக்குதிரை வாகனத்தில் பெருமாள் தாயாா் தோளுக்கினியாளுடன் வீதியுலா செல்கிறாா்.

விழாவில் 9-ஆம் நாளான செப். 22-அன்று காலையில் ரதரோஹணம் எனப்படும் தேரோட்டம் நடைபெறுகிறது. மதியம் காவிரியில் தீா்த்தவாரி நடைபெறுகிறது.

10-ஆம் நாளான செப். 23-ஆம் தேதி காலையில் மூலவா் திருமஞ்சனம், மதியம் அன்னப்பாவாடை உற்ஸவம், மாலையில் துவாதச ஆராதனம், புஷ்ப யாகம் சாற்று முறை, இரவு சப்தாவரணம் புறப்பாடு நடைபெறவுள்ளது.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா் செய்து வருகின்றனா்.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஒப்பிலியப்பன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments