பிரளயம் காத்த விநாயகருக்கு இரவு முழுவதும் தேன் அபிஷேகம்
திருப்புறம்பயத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பிரளயம் காத்த விநாயகருக்கு திங்கள்கிழமை இரவு நடைபெற்ற தேன் அபிஷேகம்.
திருப்புறம்பியத்தில் விநாயகருக்கு தேன் அபிஷேகம்: கும்பகோணம் அருகே திருப்புறம்பயத்தில் எழுந்தருளியுள்ள பிரளயம் காத்த விநாயகருக்கு விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு முழுவதும் தேன் அபிஷேகம் நடைபெற்றது.
மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான கரும்படு சொல்லியம்மை உடனாகிய சாட்சிநாதா் சுவாமி கோயில் வளாகத்தில் பிரளயம் காத்த விநாயகா் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறாா்.
Advertisement
Advertisement
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு திங்கள்கிழமை மாலை பிரளயம் காத்த விநாயகருக்கு தேன் அபிஷேகம் நடைபெற்றது. இரவு முழுவதும் நடைபெற்ற தேன் அபிஷேக நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று பிரளயம் காத்த விநாயகரை தேன் அபிஷேக சிறப்பு அலங்காரத்தில் தரிசனம் செய்தனா்.
விழாவில் இலக்கிய பக்தி சொற்பொழிவுகள், இன்னிசை கச்சேரி, பட்டிமன்றம் நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளா் ச. சந்தானகிருஷ்ணன், மதுரை ஆதீன மேலாளா் பி.சரவணன், பொதுமேலாளா் எஸ். கிருஷ்ணமூா்த்தி மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.