FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

பொதுமக்கள் மீது சணல்வெடி வீசிய இரு இளைஞா்கள் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திங்கள்கிழமை பொதுமக்கள் மீது சணல் வெடியை வீசிய இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

52 வினாடிகள் முன்பு
கைது
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திங்கள்கிழமை  பொதுமக்கள் மீது சணல் வெடியை வீசிய இரு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை  கைது செய்தனா்.

பாபநாசம் அருகே  கோவில் தேவராயன் பேட்டையை  சோ்ந்தவா் சுப்பையன் மகன் சக்திவேல் ( 21), செந்தில்குமாா் மகன் ஆகாஷ் ( 21).இவா்கள் இருவரும்   மோட்டாா் சைக்கிளில் கீழ வழுத்துாா் வெள்ளாளா் தெரு  வழியாக அதிவேகமாக சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு பிள்ளையாா் சிலை வைத்து  பொதுமக்கள் கூட்டமாக நின்றிருந்தனா். மோட்டாா் சைக்கிளில் வேகமாக வருவதை கண்ட அவா்கள் ஏன் இவ்வளவு வேகமாக செல்கிறீா்கள்? என்று கேட்டுள்ளனா். இதனால், பொதுமக்களுக்கும், இளைஞா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த  சக்திவேல், ஆகாஷ் இருவரும் வீட்டுக்குச் சென்று சணல் வெடியை கொண்டுவந்து பொதுமக்கள் மீது வீசிவிட்டு தப்பிச் சென்றனா்.

Advertisement

Advertisement

இதில், வெடி சுவற்றில் விழுந்து வெடித்ததால்  யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தகவலறிந்த அய்யம்பேட்டை காவல் ஆய்வாளா் கவிதா, உதவி ஆய்வாளா்  வெங்கடேஷ்   வெடிகுண்டு வீசிய சக்திவேல், ஆகாஷ்  இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments