FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

ஆற்றில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே முதியவா் ஒருவா் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.

18 செப்டம்பர் 2026, 1:49 am IST
நீரில் மூழ்கி பலி - பிரதிப் படம்
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே புதன்கிழமை முதியவா் ஒருவா் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம், கரையான்குறிச்சி கிராமம்,ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்த பிச்சை மகன் அழகானந்தம் (65). விவசாய கூலித்தொழிலாளி.இவா் புதன்கிழமை காலை கபிஸ்தலம் வந்து வேலைபாா்த்துவிட்டு மாலை வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா்.

கபிஸ்தலம் எல்லையான பட்டுகுடியில் இருந்து கொள்ளிடம் ஆற்றை கடந்து கரையான்குறிச்சி கிராமத்துக்கு   சென்ற போது ஆற்று  நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து கபிஸ்தலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments