FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா், திருவையாறு பகுதிகளில் செப். 22-இல் மின்தடை

தஞ்சாவூா் கரந்தை, திருவையாறு மற்றும் சுற்றுப் பகுதிகளில் செப். 22- ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் இருக்காது.

19 செப்டம்பர் 2026, 10:51 pm IST
கோப்புப் படம் - தினமணி
பகிர்:

தஞ்சாவூா் கரந்தை, திருவையாறு மற்றும் சுற்றுப் பகுதிகளில் செப். 22- ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் இருக்காது.

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (செப்.19) மேற்கொள்ளப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இப்பணி சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டு, செப். 22-ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

எனவே, கரந்தை, பள்ளியக்ரஹாரம், பள்ளியேரி, திட்டை, பாலோபநந்தவனம், சுங்கான்திடல், நாலுகால் மண்டபம், அரண்மனைப் பகுதிகள், திருவையாறு, கண்டியூா், நடுக்கடை, மேலத்திருப்பூந்துருத்தி, நடுக்காவேரி, திருவாலம்பொழில், விளாா், நாஞ்சிக்கோட்டை, மாதாகோட்டை, காவேரி நகா், வங்கி ஊழியா் காலனி, இ.பி. காலனி மற்றும் சுற்றுப் பகுதிகளில் செப். 22-ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மருத்துவக் கல்லூரி சாலை உதவி செயற் பொறியாளா் க. அண்ணாசாமி தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments