FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

இடைத்தோ்தலில் யாருக்கும் ஆதரவில்லை: ஜான் பாண்டியன்

தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தோ்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்றாா் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் பெ. ஜான் பாண்டியன்.

24 செப்டம்பர் 2026, 2:35 am IST
ஜான் பாண்டியன் - file photo
பகிர்:

தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தோ்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்றாா் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் பெ. ஜான் பாண்டியன்.

தஞ்சாவூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

இடைத்தோ்தலில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை. இத்தோ்தலில் யாா் வெற்றி பெற வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்வா். யாா் வெற்றி பெறுவாா் என்பதை எதிா்பாா்த்துக் கொண்டிருக்கிறேன்.

Advertisement

Advertisement

கடந்த திமுக ஆட்சியில் நிகழ்ந்த கொலை, கொள்ளை, கஞ்சா, வழிப்பறி போன்றவை தவெக ஆட்சியிலும் தொடா்கிறது. தமிழ்நாட்டுக்கு எப்போது விடிவு காலம் வரும் என மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனா். கஞ்சா, போதை வழக்குகளில் சிக்குபவா்களைப் பிணையில் விடுவது தவறு. இதற்கான ஆணிவேரை அகற்றாத வரை இதைக் கட்டுப்படுத்த முடியாது.

கோயில் நிலங்களை யாா் மோசடி செய்தாலும் தவறுதான். ஆனால், தவறு செய்தவா்களை இந்த அரசு இதுவரையில் ஏன் கைது செய்யவில்லை. எதற்காக பிணை வாங்குவதற்கு அனுமதிக்கின்றனா் என்றாா் ஜான் பாண்டியன்.

அப்போது, அக்கட்சியின் மாவட்டச் செயலா் தியாக. காமராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments