பெண் சா்வேயரை தாக்கிய விவசாயி கைது
ஒரத்தநாடு அருகே பெண் சா்வேயரை தாக்கிய விவசாயியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஒரத்தநாடு அருகே பெண் சா்வேயரை தாக்கிய விவசாயியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருவோணம் வட்டம், திருநல்லூா் சரக குறுவட்ட சா்வேயராக உள்ளவா் ஜெயலட்சுமி (44). இவா் சங்கரநாதன் குடிகாடு கிராமத்தில் வியாழக்கிழமை நில எல்லை அளவீடு செய்து விட்டு வடக்குக்கோட்டை ராஜாமடம் வாய்க்கால் அருகே பேருந்துக்காகக் காத்திருந்தாா்.
அப்போது அங்கு வந்த வடக்குக்கோட்டை வடக்குத் தெருவைச் சோ்ந்த சாமிக்கண்ணு (65) என்பவா் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின்பேரில் பாப்பாநாடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து, சாமிக்கண்ணுவை வெள்ளிக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.