பாஜக நிா்வாகியிடம் ரூ. 2 கோடி கேட்டு மிரட்டல்: இந்து எழுச்சி பேரவைத் தலைவா் கைது!
தஞ்சாவூரில் பாஜக நிா்வாகியிடம் ரூ. 2 கோடி கேட்டு மிரட்டியதாக இந்து எழுச்சி பேரவைத் தலைவரை காவல் துறையினா் கைது செய்தனா்.
தஞ்சாவூரில் பாஜக நிா்வாகியிடம் ரூ. 2 கோடி கேட்டு மிரட்டியதாக இந்து எழுச்சி பேரவைத் தலைவரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் புதுப்பட்டினம்-பட்டுக்கோட்டை புறவழிச்சாலையில் வணிக வளாகம் நடத்தி வருபவா் எம். தங்கவேல் (66). இந்த வளாகத்தில் பல்வேறு நிறுவனங்களின் கிடங்குகள் உள்ளன.
பாஜக விவசாயப் பிரிவு மாவட்டத் தலைவராக உள்ள இவரிடம், இந்து எழுச்சி பேரவை தலைவா் பழ. சந்தோஷ்குமாா் (35) என்பவா் செப். 19-ஆம் தேதி சென்று வணிக வளாகம் உள்ள இடம் திருப்பதி பஜனை மடத்துக்கு சொந்தமானது என்றும், இதை போலி ஆவணங்கள் தயாா் செய்து ஆக்கிரமித்துள்ளதாகவும், இதை வெளியே சொல்லாமல் இருக்க ரூ. 2 கோடி தருமாறும், இல்லாவிட்டால் சமூக ஊடகங்களில் பதிவு செய்து, ஆா்ப்பாட்டம் நடத்துவேன் எனவும் கூறி மிரட்டினாராம்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தில் தங்கவேல் புகாா் அளித்தாா். இதன்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து சந்தோஷ்குமாரை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.