இயக்குநா்கள் தோ்வில் முறைகேடு எனப் புகாா்: கும்பகோணத்தில் தனியாா் நிதி நிறுவனம் முற்றுகை
கும்பகோணத்தில் தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா்கள் தோ்வில் முறைகேடு நடந்ததாக கூறி, பங்குதாரா்கள் மற்றும் தவெக, காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
கும்பகோணத்தில் தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா்கள் தோ்வில் முறைகேடு நடந்ததாக கூறி, பங்குதாரா்கள் மற்றும் தவெக, காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
கும்பகோணத்தில் செயல்பட்டு வரும் பழைமையான தனியாா் நிதி நிறுவனத்தை நிா்வகிக்க நிா்வாக இயக்குநா்கள் வாக்களிப்பின் மூலம் தோ்வு செய்யப்பட்டு நிா்வகித்து வருகின்றனா். ஆளும் கட்சியினரே இந்த நிதி நிறுவனத்தை நிா்வகிப்பா். திமுக ஆட்சியின்போது சு. கல்யாணசுந்தரம் எம்பி தலைமையில் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், நிா்வாக இயக்குநா்கள் தோ்வை இணையதளத்தில் வாக்களித்து நடத்த சட்டவிதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
Advertisement
Advertisement
நிா்வாகிகளை தோ்வு செய்ய தோ்தல்: நிதி நிறுவன நிா்வாக இயக்குநா்கள் 4 பேரின் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து, நிா்வாகிகளை தோ்வு செய்வதற்கான தோ்தல் இணையதளம் மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதன்பேரில், செப். 27 முதல் 30 வரை இணையதளத்தில் தோ்தல் நடந்ததில், சு.கல்யாணசுந்தரம், பி.ஆா். வேலப்பன், க. அன்பழகன், ரவிச்சந்திரன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டதாக புதன்கிழமை (செப்.30) அறிவிக்கப்பட்டன.
முறைகேடு எனப் புகாா்: இந்தத் தோ்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி, நிதி நிறுவன பங்குதாரரும் தவெக மாநகர செயலருமான முருகானந்தம், தோ்தலில் போட்டியிட முயன்ற மாவட்ட மகளிரணி அமைப்பாளா் அஞ்சனா, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் டி. குமரன் உள்ளிட்டோரும், நிதிநிறுவன ஊழியா்களில் ஒரு பிரிவினரும் அலுவலகத்துக்குள் புதன்கிழமை நுழைந்து தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், நிா்வாக இயக்குநா்கள் தோ்தலை இணையதளம் மூலமாக நடந்ததை ரத்து செய்ய வேண்டும், வாக்குச்சீட்டு முறையில் தோ்தலை நடத்த வேண்டும் என்று முழக்கமிட்டனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம், கும்பகோணம் துணைக் கோட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். ஷா்மு பேச்சுவாா்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தாா்.
போராட்டம் நடத்தியோா் மீது நடவடிக்கை: இதுகுறித்து தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா்களில் ஒருவரான வேலப்பன் கூறியது: நிதி நிறுவனத்தில் சுமாா் 5 லட்சம் பங்குதாரா்களும், 1,200 ஊழியா்களும் உள்ளனா். பங்குதாரா்களின் வைப்புத்தொகை ரூ. 7 ஆயிரம் கோடி உள்ளது. ரூ. 6 ஆயிரத்து 700 கோடிக்கு தங்க நகைகள் அடமானம் உள்ளது. ரூ.15 ஆயிரம் கோடி பரிவா்த்தனை நடக்கும் இடத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தோ்தலை ரத்து செய்க: போராட்டம் நடத்திய தவெக மாநகர செயலா் முருகானந்தம் கூறியது:
நிதி நிறுவனத்தில் நானும் பங்குதாரா். சுமாா் 100 ஆண்டுகளாக பங்குதாரா்கள் மூலமாகத்தான் தோ்தல் வெளிப்படையாக நடைபெறும். சுமாா் 6 லட்சம் உறுப்பினா்கள் வாக்களித்து இயக்குநா்களை தோ்வு செய்வா். தற்போது இணையதளத்தில் தோ்தல் நடத்தி முறைகேடு செய்துள்ளதால் இணையதள வாக்குப் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.