கல்மந்தை குடியிருப்பு மக்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி காந்தி மார்க்கெட் கல்மந்தை காலனியில் ஏற்கெனவே குடியிருந்தவர்களுக்கு வீடு வழங்குவதில் முன்னுரிமை
திருச்சி காந்தி மார்க்கெட் கல்மந்தை காலனியில் ஏற்கெனவே குடியிருந்தவர்களுக்கு வீடு வழங்குவதில் முன்னுரிமை வழங்க வலியுறுத்தி புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு பகுதிச் செயலர் சிவகுமார் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச் செயலர் ராஜா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜெயபால், மாவட்டக் குழு உறுப்பினர் ராமர், துப்புரவுத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் மணிமாறன், சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் குணசேகரன், கல்மந்தைப்பகுதி குடியிருப்புவாசிகள் திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.