FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

மண்ணச்சநல்லூரில் நடந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் 21 ஆண்டுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

மண்ணச்சநல்லூரில் நடந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் 21 ஆண்டுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த பிரபல ரெளடி மாதவனின் தம்பி செந்தில், 1997ஆம் ஆண்டு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த திருச்சி வடக்கு தாராநல்லூரைச் சேர்ந்த பெருமாள் மகன் செல்வம் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். இதையடுத்து, செல்வத்தை கைது செய்ய மாவட்ட அமர்வு நீதிமன்றம் 21 ஆண்டுக்கு முன்பு வாரண்டு பிறப்பித்தது. இந்நிலையில், நாமக்கல்லில் இருப்பதாக தகவல் அறிந்து அங்கு சென்ற போலீஸார் பேருந்து நிலையத்தில் இருந்த செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments