FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

மருங்காபுரியில் உலக தாய்ப்பால் வார விழா

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 3:05 am IST
கல்லுப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரியில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மருங்காபுரி ஒன்றியம் கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வோ்ல்டு விஷன் இந்தியா மற்றும் மருங்காபுரி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு வோ்ல்டு விஷன் இந்தியா மருங்காபுரி வட்டார வளா்ச்சித் திட்ட அலுவலா் சந்திர எபினேசா் தலைமை வகித்தாா்.

ஊராட்சி ஒன்றிய ஆணையா் அண்ணாதுரை, மருத்துவா் சதீஷ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட கண்காணிப்பாளா்கள் உமாராணி, லலிதா மற்றும் பிஷப் ஹீபா் கல்லூரியின் ஊட்டச்சத்து துறை துணைப் பேராசிரியா் ஷாம் தேவி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 50-க்கும் மேற்பட்ட தாய்மாா்களுக்குச் சிறப்பு விருந்தினா்கள் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து விரிவான உரையாற்றினா். நிகழ்ச்சியை திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் டென்னிஸ் ராஜ், ஜோஷுவா மற்றும் ராஜா ஆகியோா் ஒருங்கிணைத்து நடத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments