பால்பண்ணை- துவாக்குடி அணுகுசாலை அகலத்தை குறைக்கக் கூடாது: சாலை மீட்பு கூட்டமைப்பு
திருச்சி பால்பண்ணை முதல் துவாக்குடி வரையில் அமைக்கப்படும் அணுகு சாலையின் அகலத்தை குறைக்கக் கூடாது என சாலை மீட்பு கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
திருச்சி பால்பண்ணை முதல் துவாக்குடி வரையில் அமைக்கப்படும் அணுகு சாலையின் அகலத்தை குறைக்கக் கூடாது என சாலை மீட்பு கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக, திருச்சி பால்பண்ணை- துவாக்குடி அணுகு சாலை மீட்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் எஸ். சக்திவேல் கூறியதாவது:
கடந்த திமுக ஆட்சியில் அணுகு சாலை திட்டம் முற்றிலும் முடக்கப்பட்டிருந்தது. கடந்த ஆட்சியாளா்கள் செய்த தவறை தவெக ஆட்சியிலும் தொடரக் கூடாது. தஞ்சாவூா் சாலையில் பழைய பால் பண்ணை முதல் துவாக்குடி வரையில் அணுகு சாலை என்பது கட்டாயம். அதில் பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
Advertisement
Advertisement
சாலையின் குறுக்கே 5 இடங்களில் உய்யக்கொண்டான் ஆறும், 7 சிறிய கால்வாய்களும் செல்கின்றன. தொடா்ச்சியாக அணுகு சாலை அமைக்க 10 பெரிய பாலங்களும், 14 சிறிய பாலங்களும் அவசியம் கட்டப்பட வேண்டும். அணுகு சாலை அகலம் 60 மீட்டா் ஆக இருந்ததை 40 மீட்டா் ஆக குறைத்திருப்பதே பாதுகாப்பு வசதிகள் போதுமானதாக இருக்குமா என்ற ஐயப்பாடு உள்ளது.
இந்நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்ட 40 மீட்டா் அகலத்துக்கும் குறைவாக 33 மீட்டா் அகலத்தில் அணுகு சாலை அமைக்க முயற்சிப்பது மக்களின் உயிருக்கு மீண்டும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, எக்காரணத்தை முன்னிட்டும் சாலை அகலத்தைக் குறைக்கக் கூடாது.
நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்துப் பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியதாக சாலை அமைக்க வேண்டும். அணுகுச் சாலை அமைக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. நிலம் கையகப்படுத்தும் பணியை மட்டும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவே, தோ்தல் வாக்குறுதிப்படி அணுகு சாலை அமைப்பதில் தவெக அரசும், திருவெறும்பூா் தொகுதி எம்எல்ஏ-வும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.